Monday, October 12, 2009
பெண் எனும் பாரம்!!
"ஏய் ஊமைப் பெண்ணே!
ஏன் அழு குரல் எழுப்பாமல்
சற்றே சிரிக்கின்றாய்?
தெரியுமா உனக்கு?
புதிதாய் தோண்டப்பட்ட சவக்குழி,
மண் குவியல் இருபுறமும்.
எல்லோரும் வஞ்சக நெஞ்சகர்களே!
கள்ளிப் பால் ஊற்றி உன்னை
பிணமென்று கைவிட்டுவிட எண்ணுகின்றாள்
உன் தாய். ஏனோ? எனக்குள் வாவென
இடுகாட்டு தாய் விரித்த இருகரம்,
சவக்குழி பறவையின் அடைக்கும்
இரு சிறகு, உன்னைக் கைவிடுவதாய் இல்லை."
என நான் கூவி முடிபதற்குள்
சிறு தொலைவில்,
'போய் வாடி அன்னமே' என்ற வரி
என் காதில் படர்ந்தது.
தன் மௌன மொழியால் இக்கொடுமையை
கடிந்து கூற சொற்களின்றி,
யாவரின் மரண ஓலங்களையும்
தாலாட்டு என்றே எண்ணி,
கண்மூடி, மாண்டு போனாள்
அந்த 'குட்டி தேவதை'!!
Subscribe to:
Post Comments (Atom)
It is excellent. Please keep all of these wonderful poems. We might even try to release them as your poem collections.
ReplyDelete