Thursday, November 12, 2009

வன்மக் காதல்!

கனவு கண்டு நீள்கிறது
காதலின் புணர் இரவு.
நிசப்தத்தின் பேரொலியில்
வானமது செவிடாய் போக,
இத்துயர் கண்டு கண்பொத்து
விண்மீன்கள் குருடாய் போக,
பிறையாம்பல் குளமொன்று
மாரடித்து ஓய்ந்திருந்தது!

3 comments:

  1. அருமை அருமை
    பிறையாம்பல்?

    ReplyDelete
  2. அம்மாடி அசந்து போயிட்டேன்

    ரொம்ப ரொம்ப அழகு

    நேசமித்திரன் சொன்னது போல பிறையாம்பல்

    வாழ்த்துக்கள் சகோதரி

    விஜய்

    ReplyDelete
  3. "நிசப்தத்தின் பேரொலியில்
    வானமது செவிடாய் போக"

    அருமையான வரிகள், இன்னும் கொஞ்ச நேரம் இந்தக் கவிதையோட இருக்கனும் போல ஒரு உணர்வு, வன்மக் காதல் அருமை

    ReplyDelete