Tuesday, August 24, 2010

ஓர் குளிர் வார்த்தை !

தனிமை அடர்ந்திருக்க,
உறைகின்ற குளிர் பனி
வெறுமையில் தொலைந்த
எனக்குத் துணையாக.
மேகத்தை கச்சையாக்கி,
நீலத்தை கருமையாக்கி,
வன்மையாய் வந்தது இரவு
எப்போதும் அல்லாத
கொடூர முகங்கொண்டு.

பெண்மை இழந்து அனலாய்
காட்சியளித்தது நிலா.
அது என் ஒவ்வொரு
எலும்பாய் உருக்கி
தனிமையின் சோகத்தை
என் இளமையை ஊற்றி
ஒளியாய் எரித்திருந்தது.

Monday, March 22, 2010

மரணம் தேடி!

காயப்பட்டு தொலைதூரம்
ஓடி ஓடி போகிறேன், இந்த
வாழ்கை என்னை விடுவதில்லை.
நான் தேம்பித் தேம்பி அழுதபோதும்
காதல் என்னை விடுவதில்லை.
கதறிக் கதறி, விழுந்தெழுந்து ஓடினும்
பயம் என்னை விடுவதே இல்லை.
மரணம் தேடி ஓடுகிறேன்,
மரித்துப் போக நாடுகிறேன்,
ஆம், ஓர் நிரந்தர அகால மரணம்.
நிதம் நிதம் துடித்து மரணிக்கும் போது,
வலியாய் வலிக்கிறது, தாங்க முடியவில்லை!

Sunday, February 21, 2010

எம்மனம்!

கண்கள் உன்னைக் காணும்போது
கால்கள் ஏனோ பலம் இழக்கிறது.
மதி மயங்கித்தான் போகிறேன்,
மனம் ஏனோ பயந்து சிலிர்க்கிறது.
என்று தீரும் இந்த அதீத உணர்வு?
என்றிலிருந்து இவை உணர நேர்ந்தது?
இதயம் உடைப்பேனா, அறிவீனமாய்?
ஏதும் புரியவில்லை.
எது பற்றியும் நினைக்கவும் இல்லை,
உன்னைத் தவிர.
உன்னை நிராகரிக்கத் தொடங்கவோ?
இல்லை சற்று அவகாசம் கொடுக்கவோ?
என் சிந்தனைகள் நிலையானவை அல்ல.
ஏனெனில் என்னை ஆட்கொள்வது மனம்.